25 C
Colombo
Thursday, November 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

நாட்டில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருபவர்களில், மேலும் 550 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 5 இலட்சத்து 80 ஆயிரத்து 770 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையை, சுகாதார மேம்பாட்டு பணியகம், இன்று மாலை வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில், நாட்டில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை, 6 இலட்சத்து 15 ஆயிரத்து 902 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், நாட்டில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 15 ஆயிரத்து 544 ஆக அதிகரித்துள்ளது.
அதனால், குணமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களைத் தவிர்த்து, தற்பொழுது, 19 ஆயிரத்து 588 தொற்றாளர்கள், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles