Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
பாதுகாப்பு சோதனைக்காக வாகனத்தை நிறுத்தும் உத்தரவை மீறி முன்னோக்கி சென்ற வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 40 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் கிரியுல்ல நாரம்மல வீதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.சாரதியை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டனர், ஆனால் சாரதி உத்தரவை மீறியதாகக் கூறப்படுகிறது, மேலும் பொலிஸார் குறித்த வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். உயிரிழந்தவர் அலவ்வ வதவகந்த பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.வாகனத்தை நிறுத்துமாறு சாரதிக்கு உத்தரவிட்டதையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினரா என்பது தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்படும் என குருநாகல் பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல தெரிவித்துள்ளார்.இதேவேளை வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.