நிந்தவூர் பிரதேச சபையின் போதைப்பொருள் ஒழிப்புக் கருத்தரங்கு

0
158

போதை ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல் நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில், பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர் தலைமையில் நேற்று இடம்பெற்றது.

கடந்த 23.02.2023 அன்று நிந்தவூர் பிரதேச சபை அமர்வின் போது நிந்தவூர் பிரதேசத்தில் அதிகரித்து வருகின்ற போதைப்பொருள் பாவனைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் கடந்த காலங்களில் பொது அமைப்புகளினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் ஆராயப்பட்டதோடு, இந்தக் கலந்துரையாடலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இக்கலந்துரையாடலில் இப்பிரதேசத்தில் காணப்படும் சகல பொது நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டதுடன் அவசரமாக போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

இப்பிரதேசத்தில் போதைப்பொருள் ஒழிப்பிற்கு நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஒத்துழைப்பு குறைவாக உள்ளதாகவும் இக்கூட்டத்திற்கு அவர் வருகை தராது சிங்கள மொழி பேசும் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரை அவரது பிரதிநிதியாக அனுப்பி இருந்தமை குறித்தும் கலந்தரையாடலில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.