30 C
Colombo
Thursday, April 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

முல்லைத்தீவில் எதிர்க்கட்சி தலைவரின் பங்கேற்புடன், தேர்தல் பிரசாரம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்திலும், முள்ளியவளை மாஞ்சோலைப் பகுதியிலும் ஒழுங்கு செய்யப்பட்ட தேர்தல் பரப்புரை கூட்டங்கள் நேற்று இடம்பெற்றுள்ளன.

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் ஜக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பரப்புரை கூட்டம், மாவட்ட இணைப்பாளர் முத்துக்குமாரசாமி லக்ஷயன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் எதிர்கட்சி தலைவரும் ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரோதமாசா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், ஜக்கிய மக்கள் சக்தியின் வடக்கு இணைப்பாளர் உமாச்சந்திரபிரகாஸ், மாவட்ட இணைப்பாளர்கள், கட்சியின் வேட்பாளர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் தொண்டர்கள் என பெருமளவானர்கள் கலந்துகொண்டனர்.

முள்ளியவளை மாஞ்சோலை பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்திற்கு வருகைதந்த எதிர்கட்சி தலைவரும் ஜக்கிய மக்கள் சக்தியின் தலைருமான சஜித் பிரோதமாசாவிற்கு மாஞ்சோலை மக்கள் அமோக வரவேற்பு வழங்கியிருந்தனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles