நியூசிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றார் கிறிஸ் ஹிப்கின்ஸ்!

0
174

நியூசிலாந்தின் பிரதமர் பொறுப்பில் இருந்து ஜெசிந்தா ஆர்டென் பதவி விலகியதை அடுத்து, நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றுள்ளார். புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான போட்டியில் கிறிஸ் ஹிப்கின்ஸ் களமிறங்கிய நிலையில், மற்ற உறுப்பினர்கள் யாரும் விருப்பம் தெரிவிக்காததைத் தொடர்ந்து, கிறிஸ் ஹிப்கின்ஸ் ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டமையை தொடர்ந்து இந்த பதவி ஏற்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. முன்னாள் பிரதமரான ஜசின்டா ஆர்டெர்ன் தமது பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் சிண்டி கிரோவிடம் கையளித்தார். இதன்படி, நியூசிலாந்தின் 41வது பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றுள்ளார். அவருக்கு தமது பாராட்டுக்களை முன்னாள் பிரதமர் ஜசின்டா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.