நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒற்றை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் கடும் மழை காரணமாகப் போட்டியின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் ஆட்டங்கள் முற்றாகத் தடைப்பட்டுள்ளது. ஈரமான மைதானத்தை உலர வைக்க பணியாளர்கள் மின்விசிறியைப் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டா மைதானத்தில் மழைநீரை அகற்ற நவீன வசதிகள் இல்லை, பணியாளர்களுக்கு போதிய பயிற்சியில்லை என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் நிர்வாகி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
குறித்த மைதானத்தில் கழிவறை வசதிகள் கூட இல்லை என போட்டியைக் காணச் சென்றவர்களும் தெரிவித்துள்ளனர்.