மே 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராச்சியின் சகோதரரான தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் நிஹால் வெதாராச்சி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று தங்காலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டமையை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் சந்தேகநபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.