நீதிமன்றக் கட்டமைப்பு அனைத்தையும் டிஜிற்றல் மயப்படுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது என நீதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
நீதிமன்றக் கட்டமைப்பில் ஆவணங்களை பராமரித்தல், முகாமைத்துவம், வழக்குகள் தொடர்பான அறிக்கைகளை வைத்திருத்தல், விநியோகத்தில் உள்ளிட்ட அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளும் இதன் மூலம் டிஜிற்றல் மயப்படுத்தப்படவுள்ளது என நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வேலைத்திட்டத்தை நீதியமைச்சு, நீதிச்சேவைகள் ஆணைக்குழு, தொழில்நுட்ப அமைச்சு என்பன இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரிவுடன் இணைந்து செயல்படுத்தப்படவுள்ளது.