நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தை தேசிய மின்கட்டமைப்பில் இணைப்பதற்கு பாதிப்புகளுக்கு அமைய மேலும் இரண்டு வாரங்கள் செல்லும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த மின்னுற்பத்தி நிலையம் நிர்மாணிக்கப்பட்டு 12 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அதன் பராமரிப்பு பணிகள் சீன பொறியியலாளர்களால் மாத்திரம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.