நுவரெலியா ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட, கோட்டம் மூன்று, பொகவந்தலாவ எலிபடை தமிழ் வித்தியாலய மாணவர்கள், குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று நண்பகல் 12.00 மணியளவில், 10 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில்,
பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில், 4 மாணவர்களும், 4 மாணவிகளும், தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக, வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே.ஜயசூரிய தெரிவித்தார்.
பாடசாலையில் பின்புறத்தில் உள்ள மரத்தில், குளவிகள் காணப்படுவதனால், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால், குளவிக் கூடுகளை அகற்ற, நடவடிக்கையை தொடர்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.