நுவரெலியாவில் நாட்டின் முதலாவது ஸ்ட்ரோபெரி உற்பத்தி மாதிரிக் கிராமத்தில் கன்றுகள் நடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
நுவரெலியாவில் உள்ள நான்கு கிராமங்களை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்ட்ரோபெரி உற்பத்தி மாதிரி கிராமத்தை அமைப்பதற்கு விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.இரண்டு கோடி ரூபாய் செலவில் 50 விவசாயிகளை பயன்படுத்தி 42 காப்பக வீடுகளில் இந்த ஸ்ட்ரோபெரி உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
விவசாயம் மற்றும் தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவின் பணிப்புரையின் பேரில் ஏற்றுமதி செய்யக்கூடிய ஒவ்வொரு பழம் மற்றும் மரக்கறி பயிர்ச்செய்கைக்கும் ஒரு மாதிரி கிராமத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த ஸ்ட்ரோபெரி பயிர்ச்செய்கைக்காக அவுஸ்திரேலியாவில் இருந்து இந்த நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட ஸ்ட்ரோபெரி நாற்றுகளை விவசாயிகளிடையே விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாதுகாப்பான நாற்று நடும் பணி தற்போது முற்றாக நிறைவடைந்துள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் ஏ.எம்.எச். எல். அபேரத்ன தெரிவித்துள்ளார்.