நுவரெலியா ஆவேலியா பகுதியில், கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
நுவரெலியா ஆவேலியா பகுதியில் அமைந்துள்ள நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான வாவியில் இருந்து, டி 82 ரக கிரேனைட் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
ஆவேலியா பகுதியில் வசிக்கின்ற தொழிலாளி ஒருவர் வழங்கிய தகவலின் பிரகாரம், நுவரெலியா பொலிஸார், வாவிக்கு சென்று சோதனை மேற்கொண்ட போது, கைக்குண்டு மீட்கப்பட்டது.
இது தொடர்பான அறிக்கை ஒன்றை, நுவரெலியா நீதிமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, நுவரெலியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதனால், நீதிமன்ற உத்தரவின் பின்பு, கைக்குண்டை அழிப்பதா அல்லது வேறு தரப்பினரிடம் கையளிப்பதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.
எனினும், இது தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை.