நுவரெலியா தபால் நிலையத்தை விற்பதற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் எதிர்ப்பு

0
141

நுவரெலியாவின் அடையாள சின்னமாக 130 வருடங்களுக்கு மேலாக திகழும் நுவரெலியா தபால் நிலையத்தினை விற்பதற்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் சிலர் இன்று செவ்வாய்க்கிழமை (07) தபால் நிலையத்திற்கு முன்பாக கைகளில் பதாகைகளை தாங்கியவாறு தமது எதிர்ப்பினை வெளிக்காட்டினர்

அத்துடன் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொடர்ந்து நுவரெலியா தபால் நிலையத்தை விற்பதற்கு எதிராக செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

மேலும் நுவரெலியா பிரதான தபால் நிலைய கட்டிடத்தை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டிடத்தை சுற்றி கருப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளதுடன் இ தற்போதைய அரசுக்கு எதிரான வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.