நுவரெலியா பாடசாலைகளுக்கு பூட்டு!

0
97

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (06) மற்றும் நாளை மறுதினம் (07) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நுவரெலியா  வலயக்கல்விப் பணிப்பாளர் இதனை தெரிவித்துள்ளார்.

மலையகத்தில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.