உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு, நுவரெலியா பிரதான தபாலகத்தில் இரத்ததான முகாம் நடத்தப்பட்டுள்ளது. 148 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு, நுவரெலியா பிரதான அஞ்சலகத்தினால், நான்காவது முறையாக, இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது. இதில், பிராந்திய தபால் கண்காணிப்பாளர் எச்,பி,என்,ஜி.குணரத்தின, நுவரெலியா தபாலக அதிபர் சந்திக்க அமரகோன் ஆகியோர் பங்கேற்றனர்.