நுவரெலியா வசந்த விழா பிரமாண்டமாக ஆரம்பம்

0
290
நுவரெலியா நகரை மையமாக கொண்டு வருடாந்தம் நடத்தப்படும் நுவரெலியா வசந்த விழா கடந்த 1 ஆம் திகதி பிரமாண்டமாக ஆரம்பமானது.மத்திய மாகாண செயலாளர் காமினி ராஜரத்ன மற்றும் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட ஆகியோரின் தலைமையில் இது ஆரம்பிக்கப்பட்டதுடன், ஏப்ரல் 30-ஆம் திகதி வரை இவ்விழா நடைபெறவுள்ளது.
நுவரெலியா நகரிலுள்ள 17 பிரதான பாடசாலைகளின் சிறுவர்கள், இராணுவம், விமானப்படை, கடற்படை, பொலிஸ் பேண்ட் காட்சிகள் , பல்வேறு காட்சிகள் மற்றும் அலங்கார அம்சங்களுடன் இந்த வருட நிகழ்வு குதிரையேற்ற காட்சியுடன் ஆரம்பமானது.கார் பந்தயம், மோட்டார் சைக்கிள் பந்தயம், குதிரை பந்தயம், படகு பந்தய போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.நுவரெலியா மாநகர ஆணையாளரும் மேலதிக மாவட்டச் செயலாளருமான சுஜீவ போதிமான்னவின் பணிப்புரையின் பேரில், நுவரெலியா மாநகர சபையினால் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.