நுவ.புளியாவத்தை நகரில் மாட்டிறைச்சிக் கடைக்கான அனுமதி இரத்து!

0
117

நுவரெலியா மாவட்டம் நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட புளியாவத்தை நகரில், மாட்டிறைச்சி வர்த்தக நிலையத்தை அமைப்பதை தடை செய்யும் கோரிக்கையை பிரதேச மக்கள், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இ.தொ.கா பொது செயலாளருமான ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதனையடுத்து புளியாவத்தை பகுதிக்கு சென்று பிரதேச மக்களுடன் கலந்துரையாடிய ஜீவன் தொண்டமான், நோர்வூட் பிரதேச சபை விடுத்துள்ள மாட்டிறைச்சி கடைக்கான டெண்டர் அறிவித்தலை நிறுத்தி, டெண்டருக்காக பெறப்பட்ட 15 இலட்சம் ரூபாவை உரியவரிடம் கையளிக்குமாறு தவிசாளருக்கு பணித்துள்ளார்.