Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
சம்பள அதிகரிப்பு இல்லாமை, தொடர்ச்சியாக பணியாற்ற வேண்டிய நிலை உள்ளிட்ட பல பிரச்சினைகளினால் சிறைக்காவலர்கள் பலர் சேவையிலிருந்து விலகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலை வரலாற்றில் இது போன்ற ஒரு பாரதூரமான பிரச்சனை இதற்கு முன் எழுந்ததில்லை என்று தெரிவிக்கப்படுகிறது . இப் பிரச்சினையால் நூற்றுக்கும் மேற்பட்ட ஒழுங்குமுறை அதிகாரிகள் சேவையை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.உயர் அதிகாரிகள் கூட இந்த சம்பளப் பிரச்னையால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதுடன் ஓய்வூதியத்துக்காக, சிரமங்கள், பிரச்னைகளை பொறுத்துக் கொண்டு, பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பெருமளவிலான சந்தேக நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வரும் இவ்வேளையில், அதிகளவான ஒழுங்குமுறை உத்தியோகத்தர்கள் சேவையிலிருந்து விலகிச் செல்வது சிறைச்சாலை திணைக்களத்தினால் தாங்க முடியாத பிரச்சினையாக மாறியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.