நேபாளத்தில் ஹெலிகொப்டர் விபத்தில் 6 பேர் பலி

0
155

நேபாளத்தில்  இன்று இடம்பெற்ற விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

6 பேருடன் பயணித்த ஹெலிகொப்டர்  காணாமல் போயுள்ளதாக வான் பயண நிறுவனமொன்று  இன்று காலை தெரிவித்தது. 

மெக்ஸிகோவைச் சேரந்த 5 சுற்றுலா பயணிகளும் இந்த ஹெலிகொப்டரில் பயணித்தனர்.

ஏவரெஸ்ட் பிராந்தியத்திலுள்ள லுக்லாவுக்கு அருகிலிருந்து தலைநகர் காத்மண்டுவை நோக்கி இன்று காலை 10.04 மணியளவில் இந்த ஹெலிகொப்டர் புறப்பட்டது. 

10 நிமிடங்களின் பின் அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்து என மானாங் எயார் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்,

இந்நிலையில்,  ‍இந்த ‍ஹெலிகொப்டர் புறப்பட்டு சிறிது நேரத்தில் வீழ்ந்துள்ளதாகவும் அதில் பயணம் செய்த 6 பேரும் உயிரிழந்துள்ளனர் எனவும் நேபாளத்தின் சிவில்  விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.