நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர், நேரடி வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பில் வர்த்தமானி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வர்த்தமானி அறிவித்தலின் படி, சூரிய ஒளி அமைப்புகள், தொலைபேசிகள் மற்றும் உதிரிப்பாகங்கள், தளபாடங்கள், காலணிகள், எழுதுபொருட்கள், சமையலறை உபகரணங்கள், படுக்கை விரிப்புகள், மெத்தைகள் மற்றும் ஆயத்த ஆடைகள் ஆகியவற்றை விற்பனை செய்யும் அனைத்து நேரடி வர்த்தகர்களும், தங்களை நுகர்வோர் அதிகார சபையில் பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் வர்த்தகர் ஒருவர், வாடிக்கையாளருக்கு விற்பனை செய்த பொருட்களின் விபரங்கள் அடங்கிய பற்றுச்சீட்டை அச்சிடப்பட்ட அல்லது மின்னணு வடிவில் வழங்க வேண்டும்
குறித்த பற்றுச்சீட்டுக்களின் பிரதிகளையும் வர்த்தகர்கள் தம்வசம் வைத்திருக்க வேண்டும்.
இந்தநிலையில் குறித்த பற்றுச்சீட்டில், விற்கப்பட்ட பொருட்களின் அளவு, விற்கப்பட்ட பொருட்களின் ஒரு அலகு மதிப்பு, விற்கப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு, தொகுதி எண், உத்தரவாத காலம், பெயர் மற்றும் முகவரி என்பன அடங்கியிருக்கவேண்டும் என்றும் நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் வர்த்தமானியின் மூலம் அறிவித்துள்ளார்.