பங்களாதேஷ் அணிக்கு எதிரான இலங்கை T20 அணி அறிவிப்பு

0
3

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கு எதிராக 3 போட்டிகளை கொண்ட T20 தொடருக்கான இலங்கை அணி இன்று (7) அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை அணியின் தலைவராக சரித் அசலங்க பெயரிடப்பட்டுள்ளதோடு, முன்னாள் அணித் தலைவர் தசுன் சானக்க மற்றும் சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

அதற்கமைய, இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது T20 போட்டி எதிர்வரும் 10ஆம் திகதி கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.