எதிர்வரும் பண்டிகை காலத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா 20 கிலோகிராம் அரிசி, நிவாரணமாக வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் வைபவரீதியாக இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று முற்பகல் 10.30 முதல் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி தமது அக்கிராசன உரையை முன்வைத்தார்.
அதில் கடந்த ஆண்டு காணப்பட்ட பொருளாதார நிலைமை, தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி விளக்கமளித்தார்.
அத்துடன், எதிர்வரும் பண்டிகை காலத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா 20 கிலோகிராம் அரிசி, நிவாரணமாக வழங்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.