பண்டி உரத்தின் அதிக பட்ச சில்லறை விலை 9000!

0
87

இலங்கையில் பண்டி உரம் அல்லது எம்ஓபி உரம் விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச விலையை 9000 ரூபாயாக அறிவிக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அறிவித்துள்ளார்.

விவசாய அமைச்சர் அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களின் தலைவர் டொக்டர் ஜகத் பெரேராவுக்கு குறித்த ஆலோசனையை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.தற்போது, ​​27 ஆயிரம் மெற்றிக் தொன் பண்டி உரம் அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களிடம் உள்ளது.

இதேவேளை யூரியா உரம் அனைத்து உழவர் சேவை மையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஒரு மூட்டை யூரியா உரம் மற்றும் பண்டி உரம் 9000 ரூபாவிற்கு விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவிக்கின்றது.