இலங்கை டி20 கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வனிந்து ஹசரங்கவின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இலங்கை டி20 ஓவர் கிரிக்கெட் அணியில் தொடர்ந்து இருப்பார் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.