செ.தி.பெருமாள் பம்பர குளவி கொட்டுக்கு இலக்கான நபரொருவர் வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற வேளையில் மரணமடைந்துள்ளார் வெள்ளிக்கிழமை (08) குளவி கொட்டுக்கு இலக்கான மஸ்கெலியா, ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவைச் சேர்ந்த 36 வயதான சிவா கனகரட்ணம் என்பவரே உயிரிழந்துள்ளார். தான் வளர்க்கும் பசுவுக்கு புல் அறுத்துக்கொண்டு, குடிநீர் குழாய் செப்பனிட சென்ற வேளையில் அதி விஷமுள்ள பம்பர குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார். அவரை, டிக்கோயா -கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளையில் மரணித்துள்ளார். இவரது உடலம் டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் உள்ள சவ சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மஸ்கெலியா பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்