பரந்துபட்ட அரசியல் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில், பொதுஜன பெரமுன : ரஞ்சித் பண்டார

0
130

15 கட்சிகளுடன், பரந்துபட்ட அரசியல் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஈடுபட்டுள்ளதாக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில், பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமல்ல, கூட்டணி சம்பந்தமாக 15 கட்சிகளுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், பரந்தப்பட்ட கூட்டணி அமைக்கப்படும் என்பதுடன், புதிய அமைச்சரவையும், விரைவில் நியமிக்கப்படும்.
என குறிப்பிட்டுள்ளார்.