ஒலிம்பிக் போட்டியின் வரலாற்றில் எப்போதுமே நவீனத்துவத்தின் மறுபிறப்பை நிருபிக்கும் பிரான்ஸ் (France) தனக்கே உரிய பிரமாண்டமாக தனித்துவம் மற்றும் அசாதார படைப்புத்திறனுடன் ஒலிம்பின் ஆரம்ப நிகழ்வை நேற்றிரவு (26) நடத்தி முடித்துள்ளது.
ஆரம்ப விழாவை வழக்கம் போல் மைதானத்தில் அல்லது அரங்கத்தில் நடத்தாமல் நகரின் மையப்பகுதியில் உள்ள செயின் நதியில் நடத்துவதற்கான திட்டம் முதலில் பரிந்துரைக்கபட்டபோது இது சாத்தியமில்லை என்றே பலரும் கருதினர்.
ஆனால் இது சாத்தியமே என நேற்றிரவு பரிசில் நிருபிக்கப்பட்டதுடன் ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக ஒரு ஆரம்ப விழா ஒரு மைதானத்தில் நடைபெறாமல் நீர்வழிப்பாதையுடன் ஒரு நகரையே அரங்கமாக மாற்றிய அதிசயமாக மாறியுள்ளது.
கண்கவர் நிகழ்வு
இந்தநிலையில், நேற்று கண்கவர் நிகழ்வுகளுடன் இந்த ஆரம்ப நிகழ்வு மிகமிக வித்தியாசமாக சுமார் நான்கு மணி நேரம் நேரடியாகவும் உலகளாவிய ரீதியில் கோடிக்கணக்கான பார்வையாளர்களை தொலைக்க்காட்சிகளிலும் கட்டிப்போட்டிருந்தது.
பிரெஞ்சு (French) அரச தலைவர் இமானுவேல் மக்ரோன் (Emmanuel Macron), பிரிதானிய (British) பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) மற்றும் உட்பட 100 இற்கும் மேற்பட்ட அரச தலை முகங்கள் இந்த நிகழவில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு ஆரம்பிக்க முன்னர் பிரான்சின் தொடருந்து வலையமைப்பு மீது நாசகார தீவைப்புத் தாக்குதல்கள் இடம்பெற்றாலும் ஆரம்ப நிகழ்வு இடமபெற்ற போது மழைப்பொழிவு இருந்தாலும் இந்த பிரமாண்டமா நிகழ்வு இடமபெற்றது.
விளையாட்டு வீரர்கள்
6,800 விளையாட்டு வீரர்கள், 85 படகுகளில் தலைநகரின் மிகவும் பிரபலமான லூவ்ர் அருங்காட்சியகம், ஈபிள் கோபுரம், கிராண்ட் பலஸ் எனப்படும் பெரு அரண்மனை மற்றும் ஆர்க் து ட்ரையம்ப் போன்ற அடையாளங்களைக் கடந்து ஆற்றில் பயணிக்க பாலங்கள், முக்கிய கட்டிடங்கள் உட்பட்ட இடங்களில் 12 கலைப் பிரிவுகளை கொண்ட கலைஞர்களின் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த விழாவில் அமெரிக்க (America) பாடகி லேடி காகா (Lady Gaga) மற்றும் கனடிய Canada பாடகி செலின் டி யோன் (Celine de Yon) உட்பட்ட பிரபலங்களிக் ஆச்சரியமான நிகழ்ச்சிகள் நடந்ததுடன் கொட்டும் மழை விளையாட்டு வீரர்களை நனைத்தாலும் 2,000 இசைக்கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் நடத்திய உற்சாகமான நிகழ்வுகளை அதனால் குழப்ப முடியவில்லை. முகமூடி அணிந்து ஒலிம்பிக் தீபத்தை ஏந்தியவர் இறுதியில் தனது இயந்திரக் குதிரையுடன் ஆற்றில் பயணித்து ஈபிள் கோபுர பகுதிக்கு சென்று அதனை ஒப்படைக்க இறுதியில் அது காற்றில் மிதக்கும் பலூன் போன்ற வடிவிலான பிரமாண்ட ஒலிம்பித்தீபத்தை ஏற்றவைத்தது.
விளையாட்டுப் போட்டி
ஏற்றப்பட்ட தீபம் பாரிசின் வானத்தில் உயரமாக எழுந்த போது ஈபில் கோபுரம் வர்ண சீரொளியில் ஜாலங்களை வெளிப்படுத்தி ஒளிர்ந்தமை பிரமாண்டதாக காட்சியாக இருந்தது. அத்தோடு, ஒலிம்பிக் குழு தலைவர் பாக் தனது உரையில் போர்களாலும் மோதல்களாலும் சிதைந்து கிடக்கும் உலகில் அமைதிக்கான அழைப்புடன் நிகழ்வுகள் ஆரம்பிபப்பதாக தெரிவித்திருந்தார். மேலும், ஒகஸ்ட் 11 ஆம் தேதி முடிவடையும் விளையாட்டுப் போட்டிகளில் 10,500 இற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் 32 விளையாட்டுகளில் போட்டியிடும் நிலையில் இன்று (27) சனிக்கிழமை இடம்பெறும் போட்டிகளில் 14 தங்கப் பதக்கங்கள் உட்பட பல தங்ககங்கள் வெல்லப்பட உள்ளதுடன் இந்த ஒலிம்பிக்கில் உக்ரைன் (Ukraine) மீதான ரஷ்ய (Russia)படையெடுப்பைத் தொடர்ந்து ரஷ்யர்கள் மற்றும் பெலாரசியர்கள் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.