யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஆதார வைத்தியாசாலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வைத்தியாசாலை தாதியர்கள், ஊழியர்கள் இன்று மதியம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதிய நேர இடைவேளையின்போது வைத்தியசாலைக்குள் நுழைந்து வன்முறையிலீடுபட்ட நபரைக்; கைது செய்யுமாறும் வைத்தியசாலையின் பாதுகாப்பை அதிகரிக்குமாறும் போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் அத்துமீறி நுழைந்த நபர், கடமையிலிருந்த தாதி உத்தியோகத்தர் மீது தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.