பருப்பு, மாசி கருவாட்டுக்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.பருப்பு வகைகளுக்கு கிலோவுக்கு 25 சதமும் மாசி கருவாட்டுக்கு 302 ரூபாயும் வரியாக அறவிடப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த 14ஆம் திகதி முதல் எதிர்வரும் டிசெம்பர் 31ஆம் திகதி வரை நடைமுறைக்கு வரும் வகையில் இந்தப் பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவின் வழிகாட்டுதலின் படி இந்த வரி விதிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, மைசூர் பருப்பு மற்றும் மஞ்சள் பருப்புக்கு ஒரு கிலோவுக்கு 25 சதம் சிறப்பு வரி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று மாசி கருவாடு மற்றும் அதற்கு ஈடான பொருட்களுக்கு ஒரு கிலோவுக்கு 302 ரூபாயும் முள் நீக்கப்பட்ட மீன் அல்லது உறைய வைக்கப்பட்ட மீனுக்கு கிலோ ஒன்றுக்கு 10 வீதம் அல்லது 400 ரூபாயும் வரியாக அறவிடப்படும்.