காலி வீதியின் பலப்பிட்டிய பெரதுடுவ என்ற இடத்தில் பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த காலி மாவட்ட சாரணர் ஆணையாளர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த அவரது மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அம்பலாங்கொட பிரஜாபதி கோதமி மகளிர் உயர்தர பாடசாலையின் ஆசிரியரும், காலி மாவட்ட சாரணர் ஆணையாளருமான பலப்பிட்டியைச் சேர்ந்த காமினி சேபால டி சொய்ஸா என்ற 56 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.