பல்லேகல சிறையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

0
79

பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் 11 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தடுப்புக் காவலில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பல்லேகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தப்பி ஓடியவர் பொரளை பேஸ்லைன் வீதியில் வசிக்கும் 54 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையின் பயிர்ச்செய்கை பிரிவில் பணிபுரிந்தவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த கைதி போதைப்பொருளுக்கு அடிமையானதால் 11 வருடங்களும் ஒரு மாதமும் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.