மஸ்கெலியா – ஹட்டன் வீதியில் சேவையில் ஈடுபடும், தனியார் பஸ் பணியாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள், தொழிலுக்குச் செல்வோர் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தனியார் பஸ் ஒன்றின் சாரதி மற்றும் அதன் நடத்துநர் மீது சிலர் மஸ்கெலியா பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, குறித்த பனி புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில், இதுவரையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.