பஸ் பயணக் கட்டணம் குறைப்பு!

0
87
இன்று (01) முதல் அமுலாகும் வகையில் பஸ் பயணக் கட்டணத்தை 5 சதவீதத்தால் குறைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.வருடாந்த பஸ்க் கட்டண திருத்தம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சுக்கும் பஸ் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.இதற்கமைய புதிய குறைந்தபட்சப் பஸ் கட்டணம் 30 ரூபாவில் இருந்து 28 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.