பஸ் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; இளைஞன் பலி !

0
14

தம்புள்ளை – வேவல வீதியில் கெப்எல பகுதியில் புதன்கிழமை (19) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த ஒருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கிம்பிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவ இளைஞர் ஆவார். 

உயிரிழந்தவரின் சடலம் தம்புள்ளை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்