பஸ் விபத்தில் 37 பேர் படுகாயம்

0
65

நெல்லிகலவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். 37 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பூண்டுலோயாலுவிலிருந்து நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்திற்கு வழிபடுவதற்காக பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட 37 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

பூண்டுலோயா ஹல்பொல பகுதியைச் சேர்ந்த பஹல்கெதர சுகதபால (வயது 79) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த 35 பேர் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஆபத்தான நிலையில் இருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.