நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த அறிவுறுத்தல்களை புறக்கணிக்கும் பாடசாலை அதிகாரிகளிடம்இ கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த மாணவர்கள் தொடர்பில் பொறுப்புடன் செயற்படுமாறு கோரியுள்ளார்.
கடந்த சில வாரங்களாக நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பத்துடனான காலநிலை நிலவுகிறது.
அதன்படிஇ மன்னார்இ வவுனியாஇ முல்லைத்தீவுஇ கொழும்புஇ கம்பஹாஇ மொனராகலைஇ மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று வெப்பமான காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில்இ மனித உடலின் சராசரி வெப்பநிலை சுமார் 37 பாகை செல்சியஸ் ஆக காணப்பட வேண்டும்.
இந்தநிலையில் தற்போது அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக மனித உடலில் தொடர்ச்சியான மாற்றங்கள் ஏற்படுவதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றர்.
நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.