பாடசாலைகளை சுற்றி போதைப் பொருட்கள் மீட்பு

0
84

பாடசாலையைச் சுற்றியுள்ள 500 மீற்றர்களை சோதனையிட்ட போது போதைப்பொருள்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

3,183 பாடசாலைகளை இலக்கு வைத்து, குறித்த பாடசாலைகளை சுற்றியுள்ள 500 மீட்டர் தூரம் வரை இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை தொடர்பில் 217 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சோதனையின் போது 95 கிராம் ஹெரோயின், 7130 கிராம் கஞ்சா, 85 சட்டவிரோத சிகரெட், 16,561 போதை மாத்திரைகள், 48 கிராம் ஐஸ் மற்றும் 113 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.