மட்டக்களப்பு மாவட்டத்தில் பிராந்திய சுகாதார பணிமனை ஊடாக கொரோனா தடுப்பு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு புனித சிசிலியா மகளிர் கல்லூரியில் 250 மாணவிகளுக்கு இரண்டாம் கட்ட பூஸ்டர் பைசர் தடுப்பூசிகள் நேற்று செலுத்தப்பட்டன.குறித்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையினை மட்டக்களப்பு மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இளையதம்பி உதயகுமார் தலைமையிலான சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்தனர்.
நாடளாவிய ரீதியில் மீண்டும் கொரோனா தொற்று பரவிவரும் நிலையில் சுகாதார அமைச்சினால் நாடளாவிய ரீதியில் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்குப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.