பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறை

0
163

ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நன்கொடையாளர்களின் உதவியுடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் மஹிந்த யாப்பா தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டத்தில் தற்போது இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, 26வீத பாடசாலை மாணவர்களுக்கு தற்போது காலை உணவு வழங்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.