பாதாள உலக பிரமுகர் ‘பொடி லஸ்ஸி’ இந்தியாவில் கைது

0
15
'பொடி லஸ்ஸி' எனப்படும் பாதாள உலக நபரான அருமஹந்தி ஜனித் மதுஷங்க சில்வா இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  பொடி லஸ்ஸி 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் திகதி பலப்பிட்டிய மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார். 

சந்தேகநபருக்கு எதிர்வரும் நீதிமன்ற திகதி வரை பயணத்தடை விதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார். எனினும், 'பொடி லஸ்ஸி' தனது பிணை நிபந்தனைகளை மீறி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். அவர் இந்தியாவில் இருப்பதாக தகவல் கிடைத்ததும், சந்தேக நபரை கைது செய்ய இந்திய அதிகாரிகளிடம் உதவி கோரினார்.

பொடி லஸ்ஸி இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் இலங்கை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக பேச்சாளர் தெரிவித்துள்ளார். பிணைமுறியை மீறிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரை இலங்கைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்