கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்திற்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
சர்வதேச நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறும், காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின் படங்களையும் தாங்கியவாறும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்திற்கு முன்பாக ஏ-9 வீதியில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி, சரியான ஒருவரை பொது வேட்பாளராக நியமித்தால் தாம் பூரண ஆதரவு வழங்குவதாக தெரிவித்தார்.