இரத்தினபுரி – படுகெதர பகுதியில் பாரவூர்தியும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.நேற்றிரவு இடம்பெற்ற இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஹோமாகம, கடுவலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 28 மற்றும் 27 வயதான இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
கவனயீனமாக வாகனத்தை செலுத்தியமை விபத்துக்கான காரணம் என்பது பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
விபத்தை அடுத்து பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.