அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் H.நந்தசேன காலமானதையடுத்து ஏற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு M.G.வீரசேன நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டது.
2020 பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவின் அநுராதபுரம் மாவட்ட பட்டியலில் H.நந்தசேனவுக்கு அடுத்ததாக M.G. வீரசேன அதிகளவு விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார்.திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக அனுராதபுர போதனா வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வந்த H.நந்தசேன 04ஆம் திகதி காலமானார்.