பாரிய மரம் சரிந்து வீழ்ந்து ஒருவர் பலி :ஒருவர் காயம்

0
112

புத்தளம், முந்தல் பிரதேசத்தில் வில்பொத்தயிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது பாரிய மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

முந்தல் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது யுவதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இரண்டு யுவதிகள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீதே இவ்வாறு மரம் சரிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.