பாரிஸில் சிறந்த பாண் தயாரிப்புப் போட்டியில்
முதலாம் இடத்தை பெற்ற இலங்கைத் தமிழர்

0
240

பரிசில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான’ போட்டியில், இந்த ஆண்டுக்கான சிறப்பு விருதை இலங்கைத் தமிழரான தர்ஷன் செல்வராஜா பெற்றுள்ளார்.
தமிழில் ‘“பிரெஞ்சு பாரம்பரிய சுவையான பாண்’ என்று அர்த்தப்படும் ; La meilleure baguette de Paris என்ற பெயரில் ஆண்டு தோறும் நடைபெறும் இந்த போட்டியில், 2023 ஆம் ஆண்டுக்கான வெற்றியாளராக தர்ஷன் செல்வராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த போட்டிக்காக 175 வெதுப்பகங்களில் இருந்து பாண் அனுப்பட்டது. இவற்றில் 49 பாண்கள்அதன் நிறம் மற்றும் நீளம் தொடர்பாக நிராகரிக்கப்பட்டது.
மீதமுள்ள 126 போட்டியாளர்களில் பாரிசின் 20 ஆம் வட்டாரத்தில் Au levain des Pyrénées என்ற பெயரில் வெதுப்பகம் நடத்திவரும், இலங்கைத் தமிழரான 37 வயதான தர்ஷன் செல்வராஜா தயாரித்த பாணின் தரம் மற்றும் சுவை நடுவர்களின் தேர்வில் முதல் பரிசை வென்றிருக்கிறது.
இவருக்கான பரிசுத் தொகையாக 4,000 யூரோக்கள் வழங்கப்பட உள்ளது.
இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்களே பாரிஸ் மேயருக்கும் பிரான்ஸ் ஜனாதிபதியின் எலிசே மாளிகைக்கும், அடுத்துவரும் ஓர் ஆண்டுக்கு பாண் தயாரிக்கும் வாய்ப்பை பெற்றுக்கொள்வர்.
அந்த வகையில் இந்த வாய்ப்பும் தர்ஷன் செல்வராஜாவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
2018 ஆம் ஆண்டு இந்தப் போட்டியில் தர்ஷன் செல்வராஜா மூன்றாம் இடத்தைப் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.