பாலஸ்தீன் காஸாவில் அமைதியும் சமாதானம் வேண்டி, பாலஸ்தீன் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இன்று மட்டக்களப்பு காத்தான்குடியிலுள்ள
ஜும்ஆ பள்ளி வாயல்களில் விசேட துஆ பிராத்தனைகள் இடம்பெற்றன.
ஜும்ஆ தொழுகையின் பின்னர் இந்த விஷேட துஆப் பிராத்தனைகள் இடம்பெற்றன.
காத்தான்குடி அல் அக்ஸா ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற விசேட துஆ பிரார்த்தனையை மௌலவி எம்.வை.செயினுதீன்
மதனி நடத்தினார்.
பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை தினமும் ஐந்து நேர தொழுகைகளிலும் குனூத் ஓதப்பட்டு, விசேட பிராத்தனைகளும் இடம்பெற்று வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
Home கிழக்கு செய்திகள் பாலஸ்தீன் முஸ்லிம்களுக்கு ஆதரவாக மட்டக்களப்பு காத்தான்;குடியில் துஆ பிரார்த்தனைகள்