பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது

0
92
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் கருவலகஸ்வெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் செலுத்திய கார் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கார் வீதியை விட்டு விலகி முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதியே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.