பாலில் விஷம்: மேலும் இருவர் கைது

0
65

கொழும்பு, ஆட்டுப்பட்டி​ தெரு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இருவருக்கு பக்கற் பாலில் விஷத்தை கலந்து கொடுத்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர், பாமசியில் முன்னாள் பணியாற்றியவர் என்று ​கொழும்பு குற்றப் பிரிவினர் தெரிவித்தனர்.

பிரதான சந்தேகநபரான 26 வயதானவர் 12,524மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் வத்தளையில் வைத்தும், 32 வயதான மற்றையவர், 11,393 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கொட்டாஞ்சேனையில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விஷபால் விவகாரம் தொடர்பில், இரண்டு பெண்கள் உட்பட ஏழுபேர் கலஹாவில் மறைந்திருந்த போது, ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் ஜனவரி 24 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பொலிஸ் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இருவருகே, பாலில் விஷம் கலந்து வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இருவரும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.