நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் பாழடைந்த கட்டிடங்கள் மற்றும் வளாகங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சு மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளது.இது தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் பாடசாலை மட்டத்தில் ஆராயவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி, ஒவ்வொரு பாடசாலையும் இவ்வாறான பாழடைந்த கட்டிடங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பாடசாலை சூழலை உருவாக்க வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.