பிரபல நடிகை தமிதா அபேரத்னவுக்கும் அவரது கணவருக்கும் தொடர்ந்து விளக்கமறியல்

0
101

கொரியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி 30 இலட்சம் ரூபாவை மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரான நெல்லி ஜோன்சன் ஆகியோரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க இன்று உத்தரவிட்டார்.

குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த நீதவான் இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகக் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.